வலிமை மிகுந்த நெஞ்சை உலுக்கும் கதை
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் ! மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதிற்கில்லை என்பதால், அந்த மருத்துவரே மதுரைக்கு கொண்டு செல்ல கூறினார். மதுரையின் பிரபல தனியார் மருத்துவமனையில் இதை பற்றி நான் வினவ, patient ஐ அழைத்து வருமாறு கூறினார்கள். Icu வில் பெட் இருப்பதாகவும் அட்மிட் செய்து கொள்கிறோம் என்று கூற என் மாமா ஆம்புலன்ஸில் அங்கே அழைத்து வர பட்டார்கள். ஆனால் வந்ததும் இவ்வளவு நேரம் பெட் ...