இடுகைகள்

பெற்றோர்_கவனத்திற்கு

#பெற்றோர்_கவனத்திற்கு 10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம். (1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்)                   (2) காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல். (3) குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல். (4) வீட்டு வேலைகளை (Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம். (5) அதிகமாக குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது. (6) பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது, பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிகமாக ஓடுவது.... 7) வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது. நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புள்ள பெற்றோர்களே!    அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள், விளையாடுவதற்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுங்கள்.

ஒருவர் ஒருவரை மதித்து வாழவேண்டும்

இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.  அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார்.  அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.  உடனே அந்த இளம் மாதிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார். அம்மாது புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான்.  எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.  நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அம்மாதின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! "அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே" இங்கு நாம் வாழப்போகும்  காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,   வாய்ச்சண்டை ப...

பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வ...

எமது பிள்ளைகள் திறமை

எமது பிள்ளைகள் ........................... பிள்ளைகளை வெறுமனே ஆசிரியர்களிடம் அல்லது பாடசாலையிடம் ஒப்படைத்துவிட்டு இருந்துவிடாமல் அவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் நலமான மாற்றம் ஏற்படுவதற்கு உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கே இருக்கின்றது.  அதற்கான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகின்றோம்.   ♦️அடிக்கடி பிள்ளையுடன் உரையாடுங்கள்  ♦️பிள்ளை ஒருவிடயத்தை பார்க்கும் விதம் பெற்றோர் பார்க்கும் விதத்தைவிட மிகவும் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள் ♦️குறைந்தது ஒரு நாளில் 30 நிமிடங்களையாவது பிள்ளையுடன் வாசிக்க வாசித்துக்காட்ட செலவிடுங்கள்  ♦️புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்ற வாசிப்பு சாதனங்களை வீட்டில் உபயோகத்திற்கு வைக்கவும்  ♦️பாடசாலைக்கும் வீட்டிற்கும் இடையிலான உறவையும் நெருக்கத்தையும் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவு படுத்துங்கள்  ♦️பாடசாலை தொடர்பான விடயங்களில் நீங்கள் அக்கறையாக இருப்பதை பிள்ளைக்கு உணரவிடுங்கள்   ♦️பிள்ளையின் புத்தகங்களை ஒவ்வொரு நாளும் பார்ப்பதை பிள்ளைக்கு தெரியவிடுங்கள்.   ♦️பாடசாலையில் நடைபெறும் விடயங...

மரணத்தை விட கொடுமையான விஷயம் எது தெரியுமா

 https://chat.whatsapp.com/Dh88ytneIkC62uz5thc26Q மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?...... வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை. பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப்போல் வாழ்ந்தவருமில்லை; வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர். எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை. வாழ்க்கையின் அபத்தங்களை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி கொலை தாண்டவமாடும். கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்...... "அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் . (1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!" இப்படி ஒரு கடிதத்துடன் எ...

நபி கூறிய நடைமுறைகள்

 https://chat.whatsapp.com/IXPrQHDOLV05WKRWAHsaac நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்... ------------------------------ 01. Fajr மற்றும், அசர் மற்றும் மக்ரிப், மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம். ------------------------------ 02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம். ------------------------------ 03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம். --------------------------------- 04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம். ------------------------------ 05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.  --------------------- 06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம். ------------------------------ 07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும். ------------------------------ 08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது. ------------------------------ 09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது. ------------------------------  10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது. ------------------------------ 11. உங...

ஜகாத் எப்படி பிரிப்பது ஒரு குட்டி கதை

ஸகாத்  இதுவும் நடந்த சம்பவமே . சவுதியில் என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு 300 ஆடுகள் இருக்கும் . வருடம் ஒரு முறை அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் . அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் .. நானும் கூட செல்வேன் . ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கிறாய் 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே 20 குடும்பம் உங்களை வாழ்த்துமே அல்லது அவர்கள் உங்கள் சொந்தமா மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கிறாயே என கேட்டேன் என் முதலாளி சொன்னார் நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் அப்படி பிரித்துக் கொடுக்கும் ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் நாளையே யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள் .அப்புறம் நம்மையும் மறந்து விடுவார்கள் .. நம்முடைய நன்மையின் அளவும் அதோடு முடிந்து விடும் அவர்களின் வறுமையும் ஒழியாது . இப்ப நாம ஒரே வீட்டில் கொடுத்திருக்கோமே அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்து பார் ஆடுகள் பண்ணையாயிருக்கும் அவர்கள் அந்த ஆடுகளை பார்க்கும்போதெல்லாம் நமக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள் அந்...

இறைவனின் கோபம்

*இறைவனின் கோபம்..!* ××××××××××××××× புழுவின் கோபம் திமிர்தலோடு சரி... பறவையின் கோபம் கீறுதலோடு சரி... மிருகத்தின் கோபம் முட்டுதலோடு சரி... மனிதனின் கோபம் அன்றோடு சரி.... இறைவனின் கோபம் என்று முடியுமோ..? இறைவா....! உன் கோபத்தின் உச்சம்- கோயிலை மூடினாய்... மசூதியை மூடினாய்.. ஆலயத்தை மூடினாய்... வீடுகளை மூடினாய்.... உலகையே மூடினாய்...! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்.... ஊதியத்தை நிறுத்தினாய்... பழகுதலை நிறுத்தினாய்... ஒருவரை ஒருவர்- பார்த்தலையும் நிறுத்தினாய்.. மொத்தத்தில்- இயக்கத்தையே நிறுத்தினாய்...! இறைவனே...! தவறுதான்...! ஆணவம் அடைந்தோம்.. கர்வத்தில் மிதந்தோம்... உண்மையை மறந்தோம்... நன்மையை மறந்தோம்.... பொதுநலம் மறந்தோம்.... சுயநலம் மிகுந்தோம்... தவறுதான்...! இறைவா....! புனிதம் துறந்தோம்... மனிதம் மறந்தோம்... ஊரை மறந்தோம்.. உறவை மறந்தோம்... பெற்றோரையே- மதிக்க மறந்தோம்.. இறைவா உன்னையே- துதிக்க மறந்தோம்...! தவறுதான்.... தவறேதான்...! கூட்டுக்குள் முடங்கிய புழுவினைப் போலே வீட்டுக்குள் முடங்கினோம்.. கண்ணுக்குத் தெரியா இறைவனே...! உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே.... மண்ணுக்குள் எங்களைப்  புத...

பெண்பிள்ளையின்online வகுப்பு

#மை_மாஸ்ட்டர்  முழுமையாக வாசிக்கவும்!!!! //பேசி பேசியே உமது ஆடைகளை கழட்ட வைத்து போட்டோ,வீடியோ என்று #நிர்வாணமாக காட்ட..// Online Class என்று அழையும் பெண்பிள்ளைகளுக்கான மிக நீளமான ஆக்கம்!  (சீரழிவதற்கு நேரத்தை ஒதுக்குவதை போல் சீர் பட நேரத்தை ஒதுக்க முடியாது அல்லவா அதனால் எப்படியும்  இதனை வாசிக்க நேரம் இருக்காது 😀) இதன் சாரம்சத்தை பொறுப்புள்ளவர்கள் தயவு செய்து Phone பற்றிய அறிவு இல்லாத, பிள்ளைகளை மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பெற்றோருக்கும் சொல்லிடுங்கள். #ஆன்லைன்_பொம்புல_கள்ளன் ஒரு பருவ வயதுப் பெண்ணின் எதை பார்க்கக் கூடாதோ அதை பார்த்துவிட்டோமோ என்ற கவலை, என் மகள் இப்படி கேடு கெட்டுப் போய் விட்டாளே என்ற அதிர்ச்சியில் கதிரையில் உடைந்து போய் அமர்ந்திருந்தார் அவர். "யே டி இப்பிடி வெக்கம் கெட்டு போய் இரிக்கிராய் #வேச" (இந்த ஆக்கத்தில் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளது) ஒரு தாயின் வாயால் எந்த வார்த்தை வரக்கூடாதோ அந்த வார்த்தையால் சத்தம் வராமல் ஏசியபடி அவள் கன்னத்திலும், கண்ட இடத்திலும் அடித்துக் கொண்டிருந்தாள் அவளின் தாய். விழும் அடிகளை எல்லாம் அழுது அழுது வாங்க...

வாக்களிக்கும் முன் சிந்திக்கவும்.

 வெகுமானம் வாங்கி வாக்களிக்க முன் சில வரிகள்... 1. உங்களுக்கு ஏதோ ஒரு சன்மாத்தையோ, பொருளையோ, வாக்குறுதியையோ தேர்தல் காலங்களில் தந்து விட்டு வாக்கை வாங்குவோர். ஆட்சியில் அமர்ந்த பின் அவர்கள் உளதூய்மையுடன் மக்கள் சேவையாற்றுவார்கள் என்று எதைவைத்து நம்புகிறீர்கள். 2.உங்களிடம் இருந்து ஒரு வாக்கை பெற்றுவவதற்க்கு, இவ்வளவு  செலவு செய்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்த பின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்ப்பார்களா? உங்களுக்கு சேவையாற்ற விரும்புவார்களா? 3.தேர்தல் காலங்களில் சன்மானமாக வேட்பாளர்களிடம் இருந்து பெறும் உதவிகள் நம்மை எவ்வளவு காலம் வாழ வைக்கும்.  4.ஒரு வாக்குக்காக நமக்கு 1000மோ 5000மோ லஞ்சமாக தந்து வாக்கை வாங்குகிற இவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் எவ்வளவு நம்மிடம் இருந்து சுரண்டுவார்ள், என்பதை சிந்திப்போமாக!! 5.வாக்குரிமை என்பது போராட்டங்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டபின் மக்களுக்களுக்கு கிடைத்த உரிமை . அதை அற்பமான விடயங்களுக்காக விற்க்கலாமா? 6. இவ்வாறு எதையோ தந்துட்டு நம் வாக்குரிமையை கேட்கின்ற இவர்கள். பிற்காலங்களில் நமக்கு ஏதேனும் நலவு செய்வார்கள் என்று எ...

தேனின் நன்மைகள் பயன்கள்

 தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள்! தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும்  பொருளையும் கெட விடாது. தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.  சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால் ஊறாது. முத்து போல உருண்டு நகரும். தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன். தேனில் இருவகை உண்டு 1)காய்ச்சிய தேன் 2)காய்ச்சாத தேன் தேனிலுள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன் இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன் மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது. சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது. அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்...

கோரோன தடுப்பூசி ஒரு பார்வை

கொரோனாவுக்கு எதிரான   தடுப்பூசி குறித்த பார்வை  BNT162b2 தடுப்பூசி  நேற்றைய பொழுது முகநூல் தொடங்கி ட்விட்டர் மற்றும் ஏனைய பல இணைய தளங்களில்  "ஃபைசர்(Pfizer)  மற்றும் பயோஎன்டெக்  ( BioNTech)  கண்டறிந்துள்ள  தடுப்பூசி  90% சிறப்பாக வேலை செய்கிறது"  என்ற செய்தியைக் காண முடிந்தது  ஃபைசர் என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் உலகின் மிக முக்கிய மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்  BioNtech என்பது ஜெர்மனியில் இருந்து இயங்கும் மருத்துவத்துறையில் உயிர் தொழில்நுட்பத்தை புகுத்தி அதனைக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்து புதிதாக மருந்துகள் தீர்வுகளைக் கண்டறியும் நிறுவனமாகும்.  அப்படியே ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்த்தால்  இவை இரண்டும் முதல் உலகப்போரின் எதிரி நாடுகள்.  இரண்டாம் உலகப்போரிலும் அதே நிலை தான்.  ஆனால் இன்று அறிவியல் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிராக புதிதாக ஒன்றைக்கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்திருப்பது சிறப்பு.  💉அவர்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி எந்த வகையைச் சேர்ந்தத...

படித்ததில் பிடித்தது

அந்த காலம் . ஊசி போடாத *Doctor* .. சில்லறை கேட்காத *Conductor* .. சிரிக்கும் *police* ... முறைக்கும் *காதலி* .. உப்பு தொட்ட *மாங்கா* .. மொட்டமாடி *தூக்கம்* .. திருப்தியான ஏப்பம்... Notebookன் *கடைசிப்பக்கம்* ... தூங்க *தோள் கொடுத்த* சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* .. இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ... கோபம் மறந்த *அப்பா* .. சட்டையை ஆட்டய போடும் *தம்பி* .. அக்கறை காட்டும் *அண்ணன்* .. அதட்டும் *அக்கா* ... மாட்டி விடாத *தங்கை* .. சமையல் பழகும் *மனைவி* ... சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* .. வழிவிடும் *ஆட்டோ* காரர்...  *High beam* போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி *தேங்கா* .. 12மணி *குல்பி* .. sunday *சாலை* ... மரத்தடி *அரட்டை* ... தூங்க விடாத *குறட்டை* ... புது நோட் *வாசம்* .. மார்கழி *மாசம்* .. ஜன்னல் *இருக்கை* .. கோவில் *தெப்பகுளம்* .. Exhibition *அப்பளம்* .. முறைப்பெண்ணின் *சீராட்டு* ... எதிரியின் *பாராட்டு* .. தோசைக்கல் *சத்தம்* .. எதிர்பாராத  *முத்தம்* ... பிஞ்சு *பாதம்* .. எளிதில் *மணப்பெண்...

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

 சிறந்த சிறுகதை :  வாசித்துத்தான் பாருங்களேன்! “#உனக்கு_தகுதி_இல்லாத_இடத்தில்_நீ_இருக்காதே”     ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன்மகனை அழைத்து சொன்னார் , " மகனே , இது உனது பூட்டனின் கைக்கடிகாரம் , 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது , நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , இது பழையது என்பதால் 1000 ரூபா மட்டுமே தர முடியும் என்கின்றனர் , என்றான் .      தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு , தந்தையிடம் இதற்கு 5000 ம் ரூபாதான் தர முடியும் என்கின்றனர் என்றான் .      தந்தை ‘இதனை நூதனசாலைக்கு ( Museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப்பார்’ என்றார் ... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , நான் அங்கு போன போது , அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து , பரிசோதித்துவிட்டு , என்னிடம் இதற்கான பெறுமதி நூறு மில்லியன் என்கின்றனர் என்றான் .....

அன்பே உணரதவர்களுக்கான குட்டி கதை

அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்துச் சாகட்டும்! ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது.  அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான். இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன். “பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒர...

பொய் சொல்லும் பழக்கம் யாரால் வந்தது?

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்... பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது... பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்... வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்... இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்... இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ!, அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் உற்று நோக்குவர்... தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் மகிழ்ச்சியை விட அவர்களுக்குத் துன்பம் நேரும் பொழுது மகிழ்ச்சி கொள்வார்கள். பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள் தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள்... பாடசாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை குணம் உள்ளவர்கள் இருக்க...

இந்த பதிவு எழுதும் போது எனது வலியும் கண்ணீரும்

Dr Karthik bala இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் ! மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதிற்கில்லை என்பதால், அந்த மருத்துவரே மதுரைக்கு கொண்டு செல்ல கூறினார். மதுரையின் பிரபல தனியார்  மருத்துவமனையில்  இதை பற்றி நான் வினவ, patient ஐ அழைத்து வருமாறு கூறினார்கள். Icu வில் பெட் இருப்பதாகவும் அட்மிட் செய்து கொள்கிறோம் என்று கூற என் மாமா ஆம்புலன்ஸில் அங்கே அழைத்து வர பட்டார்கள்.  ஆனால் வந்ததும் இவ்...

இயல்பியால் ஆசிரியர் மற்றும் மாணவர் கதை

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும...

சில உளவியல் உண்மை

சில உளவியல் உண்மைகள்! 1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!! பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 3 மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.. 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். . 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக...

இளம் வயது மகளின் அரை

இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார்.  அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.  அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் குமாருடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். குமாரின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.  நீங்கள் குமாரைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க குமார் விரும்பவில்லை. குமாருக்கும் எ...

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

யார் இந்த பேராசிரியர் கபில பெரேரா?? தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்! மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த வருடம் ஒரு 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார். இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதனாலாயிருக்க வேண்டும். ஆனால் தானும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக அத் தந்தை தனது கையில் வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தைக் காட்டியவாறு கூறினார். அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரி அவரை உள்ளே செல்ல அனுமதித்தார். உள்ளே சென்று பரீட்சை மண்டபத்தில் அமர்ந்த அவர் யார் எவர் என்று மேற்பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்ல...

அன்றாட வகிழ்க்கையின் கலப்பட பொருள்

 நீங்கள் அன்றாடம் சாப்பிடும் கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி என்ன ! ... பெரின்னியல் (pernnial plant)   என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறு மரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடி வைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்து விடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும் வரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இரு வகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ் சிவப்பான பிசினும் கருப்ப...