பொய் சொல்லும் பழக்கம் யாரால் வந்தது?
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்...
பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது...
பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்...
வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்...
இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்...
இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ!, அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் உற்று நோக்குவர்...
தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் மகிழ்ச்சியை விட அவர்களுக்குத் துன்பம் நேரும் பொழுது மகிழ்ச்சி கொள்வார்கள். பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள் தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள்...
பாடசாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்...
பொதுவாக நண்பர்களுக்குள் இந்தப் பொறாமை ஏற்பட்டால், பெரும் தீங்கை விளைவிக்கிறது. நட்பில் விரிசலை உண்டாக்குகிறது...
நண்பர்கள் போல் இருந்து கொண்டே பொறாமை கொள்ளும் மனிதர்கள், நட்பு கொண்ட மனிதர்களிடம் உறவாடி அவர்களின் குடியைக் கெடுக்கிறார்கள்...
இந்த மாதிரியான ‘முகமூடி’ நண்பர்களிடம் பழகுபவர்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களை, தங்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும்...
கடுமையான எதிரியை நம்பலாம். இப்படிப்பட்டவர்களை எந்தக் காலத்திலும் நம்புதல் கூடாது. தான் வளர்வது பற்றிக் கூட அதிகம் சிந்திக்காமல் அடுத்தவர் வளர்ச்சி பற்றியே அதிகம் சிலர் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்...
அடுத்தவர் சிறப்பாக இருப்பதைப் பொறுக்க முடியாத இழிவான குணம் இது....
ஒரு சிலர் தன் வளர்ச்சி, தன் குடும்ப வளர்ச்சி என்று சிந்தித்தாலும் முன்னேற, வளம் பெற, நலம் பெற, வளர்ச்சி பெற வாய்ப்பும் கிட்டும், வழியும் பிறக்கும்...
அதைவிட்டு, அடுத்தவர் வாழ்கிறாரே என்று வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பயன்...?
ஒருவரின் பொறாமை குணம் என்றும் முன்னேற்றத்தை முழு வீச்சில் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடும்...
இந்தக் குணம் இருந்தால் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு துன்பம் தான் அதன் பரிசாகக் கிடைக்கும்...
அதேபோல அடுத்தவரின் வளர்ச்சியைப் பார்த்து அதனால் அவருக்கு அவப்பெயரைச் செய்வதும் மிகவும் தவறான செயல்...
இதன்மூலம் எதிரியை கீழ்மைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத் தானே களங்கப்படுத்திக் கொள்வார்கள்...
எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாவதுடன், பொறாமை என்னும் தீய குணத்தால் பல நல்ல நண்பர்களை இழக்க வேண்டி வரும்...!
பொறாமை குணம் உள்ளவர்கள் வாழ்வில் எதையும் வெற்றி கொள்ள முடியாது...!!
பொறாமை என்பது மிகவும் தீங்கை விழைவிக்கின்ற ஒரு எதிர்மறை எண்ணம். அதை விலக்கி வாழ்ந்தால் நல்லதே நடக்கும்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later