கவலை பட வேணடாம்
கவலை.
கவலைப்படுவதால் எதுவும் நிகழப் போவதில்லை என்ற தெளிவு முதலில் வேண்டும்.
நாம் செய்த நல்ல செயலுக்கு யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கக் கூடாது.
நாளை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
கண்களுக்கு எதிராக உள்ள கடமைகளை பட்டியலிட்டு பார்த்து, அதில் எதை முதலில் செய்தால் மனநிறைவு ஏற்படும் என ஆய்ந்து அதனைச் செய்ய வேண்டும்.
இத்தருணம் என்பது மிக மிக அற்புதமானது என்பதை உணர
வாழும் வாழ்க்கைக் காலத்தை கணக்கிட வேண்டும்.
எல்லாமே மனசுதான் என்பதை புரிந்து கொள்வதற்கு தகுந்த அறிவு தனக்கு ஏற்பட்டுள்ளதாக முழுமையாக நம்ப வேண்டும்.
பிறர் போல தாம் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவரவருக்கான வாழ்க்கை புத்தகம் தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பூரணமாக ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்.
வாழ்ந்தாக வேண்டும், வேறு வழி இல்லை என வாழாமல், சிறப்பாக வாழ ஆயிரம் வழி உண்டு என எண்ணி உற்சாகம்
கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து இறையிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்பதை பூரணமாக உணர வேண்டும்.
யாருக்கும் யாரும் குறைந்தவர் இல்லை என்பதை உணர்ந்து அதே நேரத்தில் இறுமாப்பு இல்லாமல் நடைமுறை வாழ்க்கையை புரிதலோடு தொடர வேண்டும்.
நேற்றோடு, இன்று மேம்பட்டே இருக்கிறது. அவ்வாறில்லையெனில், நாளை நிச்சயம் மேம்படும் என்று நம்பிக்கையுடன் நடை போடவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later