படிக்க பிடிக்கும்


முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்

"கள்ளச்சிரிப்பு"என்றார்கள்.


கோபங் கொண்டேன்

"சிடுமூஞ்சி"என்றார்கள்.


அதிகம் பேசாமலிருந்தேன்.

"ஊமையன்"என்றார்கள்.


சளசளவென்று பேசினேன்...!!

" ஓட்டவாய்" என்றார்கள்.


புதிய தகவல்களை பரிமாறினேன்.

" கருத்து கந்தசாமி"என்றார்கள்.


அவர்கள் வார்த்தைகளுக்கு செவி

சாய்ந்தேன்.

" ஜால்ரா"என்றார்கள்.


எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!!

" முந்திரிக் கொட்டை"என்றார்கள்.


அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

"நடிப்பு" என்றார்கள்.


யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்

" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.


வணங்குவதை நிறுத்தினேன்.

"தலைக்கனம்" என்றார்கள்.


ஆலோசனை வழங்கினேன்.

"படித்த திமிர்" என்றார்கள்.


சுயமாக முடிவெடித்தேன்.

" அதிபுத்திசாலி"என்றார்கள்.


நான் கண்ணீர் விட்டு அழுததால்.

" வேஷக்காரன்"என்றார்கள்.


நான் சிரித்த போதெல்லாம்

" மறை கழண்டுப் போச்சு"என்றார்கள்.


எதிர் கேள்வி கேட்டால்.

"வில்லங்கம்" என்றார்கள்.


ஒதுங்கி இருந்தால்.

" பயந்தாங்கொள்ளி"என்றார்கள்.


உரிமைக்குப் போராடினால்.

"கலிக்காமர்" என்றார்கள்.


எதற்கும் கலங்காமல் இருந்தால்.

"கல் நெஞ்சன் "என்றார்கள்.


"நாலு பேர் என்ன

            நினைப்பார்கள் ...?


"நாலு பேர்  என்ன

            பேசுவார்கள்....?


யாரோ நாலு பேருக்காக

           வாழ்ந்தேன்.....!!


தொலைவில் கிடந்து என்

           வாழ்க்கை.....!!


👉 அந்த நாலு பேரை கழற்றி

                   விட்டு........


👉 என்னை அணிந்து

                       கொண்டேன்.


துலங்கத் துவங்கியது

எனக்கான வாழ்வின் துளிர்....


வாழ்கிறேன் முழுமையாக.

இன்பமாக.நிம்மதியாக.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு