பெண்பிள்ளையின்online வகுப்பு
#மை_மாஸ்ட்டர்
முழுமையாக வாசிக்கவும்!!!!
//பேசி பேசியே உமது ஆடைகளை கழட்ட வைத்து
போட்டோ,வீடியோ என்று #நிர்வாணமாக காட்ட..//
Online Class என்று அழையும் பெண்பிள்ளைகளுக்கான மிக நீளமான ஆக்கம்!
(சீரழிவதற்கு நேரத்தை ஒதுக்குவதை போல் சீர் பட நேரத்தை ஒதுக்க முடியாது அல்லவா அதனால் எப்படியும் இதனை வாசிக்க நேரம் இருக்காது 😀)
இதன் சாரம்சத்தை பொறுப்புள்ளவர்கள் தயவு செய்து Phone பற்றிய அறிவு இல்லாத, பிள்ளைகளை மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பெற்றோருக்கும் சொல்லிடுங்கள்.
#ஆன்லைன்_பொம்புல_கள்ளன்
ஒரு பருவ வயதுப் பெண்ணின் எதை பார்க்கக் கூடாதோ அதை பார்த்துவிட்டோமோ என்ற கவலை,
என் மகள் இப்படி கேடு கெட்டுப் போய் விட்டாளே என்ற அதிர்ச்சியில் கதிரையில் உடைந்து போய் அமர்ந்திருந்தார் அவர்.
"யே டி இப்பிடி வெக்கம் கெட்டு போய் இரிக்கிராய் #வேச"
(இந்த ஆக்கத்தில் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளது)
ஒரு தாயின் வாயால் எந்த வார்த்தை வரக்கூடாதோ அந்த வார்த்தையால் சத்தம் வராமல் ஏசியபடி அவள் கன்னத்திலும், கண்ட இடத்திலும் அடித்துக் கொண்டிருந்தாள் அவளின் தாய்.
விழும் அடிகளை எல்லாம் அழுது அழுது வாங்கிக் கொண்டிருந்தாள் உயர் தர முதலாம் ஆண்டு
மாணவியான 17 ஹஸ்னா.
இத்தனைக்கும் காரணமான
நிப்ராஸ் எதுவும் சொல்லாமல் அந்த சோபாவில் (Sofa)
அமர்ந்து கொண்டிருந்தான்.
51 நாட்களுக்கு முன்,
"ஓ டி அப்பிடி ஜொலி.. நீயும் எப்பிடியாச்சும் ஜொயிட் (Join) ஆகுர வழிய பாரு Phone கிடைச்சதும் சொல்லு நான் குரூப் (Group) லின்ங் (Link) அ அனுப்புரேன் சரியா"
என்ற நதாவின் தொலைபேசி செய்தியை கேட்டது முதல்,
அந்த குரூப் (Group) கதையை சொல்லி எப்படி சரி தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள் ஹஸ்னா.
"உம்மா ஏண்ட கூட்டாளி எல்லாம்
A/L பாடங்கள Online ல படிக்கிறாங்க, என்னையும் அதுல படிக்க கூப்புடுராங்க, நானும் படிக்கவா"
"ஒனக்கு என்ன அறிவில்லையா?
வீட்டில இருந்து வெளியில யாரும் போக வேண்டாம், கொரொனா வருதுண்டு சொல்லி இருக்கு, நீ எங்கயோ படிக்க போகவா எண்டு கேட்கிறாய்?"
ஆன்லைன் ஸ்டடீஸ் (Onliny Studies)
என்றால் என்ன என்று தெரியாத அந்த தாய் கோபமாக அவளை நோக்கி சொல்லியதை கேட்டு சிரித்தவளாக,
"அப்பிடி எங்கயும் போர இல்ல உம்மா, நாங்க வீட்டுல தான் இருப்போம், Whatsapp Group Facebook இதுகல்ல தான் அவங்க படிப்பிப்பாங்க, அதுவும் இலவசமா படிப்பிக்கிறாங்க ....."
தன் தாயிடம்
தெளிவாக விளங்கப்படுத்தி முடித்தாள் ஹஸ்னா
"அப்பிடியா மகள் அப்ப ஊட்டு போன் (Phone) ல படிக்க.."
தாய் கூறி முடிக்க முன் இடை மறித்தவள்,
"இந்த Phone ல அது வேலை செய்யாதும்மா.."
அவளது நீண்ட நாள் போன் (Phone) ஆசையை,
வீட்டில் சட்டபூர்வமாக 😀 எடுத்துக் கொள்ள கூறிய பொய்களுடன்,
தன் தோழிகளான
நதா, மின்சா , ரிமாஷா எல்லோரும் 17,000 ரூ.பா கொடுத்து வாங்கி இருப்பதையும் சேர்த்து கூறி முடித்தாள்.
........
இன்று ஒவ்வொரு வீட்டிலும் கஷ்ட்டம் அந்த கஷ்ட்டத்துக்கு மத்தியிலும் ,
"Phone வாங்கியே தர மாட்டோம்" என்று இருந்த பெற்றோரும் கூட,
"எங்கட பிள்ளைகள்
ஆண்லைனில் படிக்கிறார்கள், கொம்ப்யூட்டரில் படிக்கிறார்கள்" என்று கூறிக் கொண்டு,
என்ன எது என்ற விபரமே தெரியாமல் படிப்பிற்காக என்ற ஒரே எண்ணத்தில்,
கடை கடையாக Phone, Laptopகளை தேடி அழைவதையும், கடனுக்கு கூட அவற்றை வாங்கிக் கொடுப்பதையும் கண்கூடாக காண முடிகிறது.
இது தான் சந்தர்ப்பம் என பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுவது ஒரு பக்கம் என்றால்,
கடைக்காரர்களும்
"இது பழைய ஸ்டொக் (Stock) புதிய சாமன் விலை கூடிட்டு" ( மந்திர வார்த்தை 😀) என்று கையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்றுத் தீர்க்கின்றனர்.
...
தன் கணவனிடம்
மகள் சொன்னதை விடவும் அதிகமாகவே கையால் மடியால் எடுத்து விட்டு, அவளுக்கு அந்த போனை கடனுக்கு வாங்கியும் கொடுத்து விட்டனர்.
இந்த கோபிட் 19/ தாக்கத்தின் பின்னர்
மழைக்கு முளைத்த காலான் போல் முக நூல் (Facebook), வாட்ஸப் (WhatsApp) ,சூம் (Zoom) என பல செயலிகள் மூலம்,
ஆன்லைன் ஸ்டடீஸ் நடத்துகிறோம் (Online Studies)
என ஒரு கூட்டம் கூத்துக் காட்டிக் கொண்டு #அழைகின்றனர்.
இவற்றைப் பார்த்ததும்
14-15 வயதுடையவர்களும் அதனை ஒரு Fashion, Trend ஆக ஆக்கிக் கொண்டு,
இந்த வகுப்பை நடத்துபவன்
எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான், இவன் கற்பிக்க தகுதியானவனா?
என்ற எதுவித தேடலும் இல்லாமல் "அவன் சொன்னான், இவள் சொன்னாள் " என்று எல்லாம் இவற்றில் இனைந்து கொள்கின்றனர்,
அங்கு கற்பிப்பவன்
போதை வியாபாரியாக இருப்பான், திருடனாக இருப்பான், பெரும் குற்றவாளியாக கூட இருப்பான்,
அந்த வகையில் ஹஸ்னா சிக்கிக் கொண்டதோ
ஆன்லைன் #பொம்புல_கள்ளன் ஒருவனிடத்திலாகும்.
...
Phone கையில் கிடைத்த சந்தோஷத்தை தன் தோழிகளிடம் தெரிவித்தபடி அவர்கள் சொன்ன அந்த WhatsApp Group இல் இனைந்து கொண்டாள் ஹஸ்னா.
அவள் இனைந்து சிறிது நேரத்தில்,அதன் Admin இடம் இருந்து,
"இந்த குழுவில் இருக்க
இந்த விபரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்,
ஒழுக்கம் பேண வேண்டும்,
எவரேனும் தேவை அற்ற விதத்தில் தொல்லை தந்தால் Call செய்து அறியத் தரவும் etc etc," என ஒரு மெசெஞ் வந்திருந்தது.
அந்த குழுவில் பதியப்படும் பாடம் சம்பந்தப்பட்ட விடயங்களில் சந்தேகம் வந்தால் , அதற்கு இன் பாக்ஸ், கோல் எடுத்து விளக்கம் கொடுத்தல்
என்றும்,
குறிப்பாக பெண்களுக்கான அவரின் சேவை அமோகமாக தொடர்ந்தது.
அந்த நேரங்களில் சோக்கான ஜோக்களை அடித்துக் கொள்ளவும் அந்த மாஸ்ட்டர் மறக்கவில்லை.
இளித்துக் கொண்டு செல்லும்
எங்கட செல்ல கிளிகளுக்கும் இது போதாதா, அவர்களிலும் சிலர் அவருடன் கொஞ்சி குழாவி கூத்தடிக்க மாஸ்ட்டரின் காட்டில் கிளிகளோ கிளிகள்.
அந்த குழுவில் இனைந்த 3ஆவது நாள்
ஹஸ்னாவிற்கு எவனோ ஒருவனிடம் இருந்து சில மெசேஜ்கள், மிஸ்ட் கோல்கள் வர,
அது அந்த குரூப்பினை சேர்ந்த ஒருவனுடையது தான் என அறிந்து கொண்டு,
அதனை ரிப்போர்ட் (Report)
செய்ய 😀 அந்த எட்மினுக்கு அழைப்பை எடுத்தாள்,
அவரின் அக்கரையும், கணிவும், அட அட,
எப்படியோ
ரிப்போர்ட் இல் தொடங்கி, டவுட் க்லியர் என்று அடிக்கடி கதைத்த ஹஸ்னா அவனின் வலையில் விழுந்துவிட்டாள்,
அது அவனுடன் பழகிய 15 ஆவது நாள்,
"எனக்கு கண்டியில் தான் திருமணம் செய்ய விருப்பம், நீங்க படிச்சு முடிய ஒக்கே என்றால் மட்டும் உங்க வீட்ட வந்து பொண்ணு கேட்கிறோம்"
என்று அவன் கேட்கும் அளவிற்கு, மரியாதை கெட்டவளாக ஹஸ்னா மாறி இருந்தாள்.
அதே போல்
இந்த குரூப்பில் ஹஸ்னாவிற்கு முன் இனைந்திருந்த நதாவிற்கும் ஒரு மாதத்திற்கு முன் இதே குரூப்பில் இருந்த ஒருவனின் மெசேஜ் வர,
அவள் அதற்கு பதில் வைக்க,
அது தொடர அவளும் அவனுடன் காதல் என்று கூத்தடித்துக் கொண்டிருந்தாள்.
என்ன தான் தோழிகளாக அனைத்தையும் இவர்கள் செயார் செய்து கொண்டிருந்தாலும்,
இந்த திருட்டு உறவு
விடயத்தை ஹஸ்னா ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளவே இல்லை.
நதாவைப், போலவே 17 வயதில்
திருமண #வெறி வந்த ஹஸ்னாவும் படிக்கிறோம், என்று அறைக் கதவை மூடிக் கொண்டு Phone ல் கதைக்கும் நேரம் கூடக் கூட,
ஆடைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து அனைத்தும் துறந்தவளாக போட்டோ,வீடியோ என்று வெறும் 25 நாள் பழகியவனுக்கு தரிசனம் கொடுத்து சீரந்து கொண்டிருந்தாள்
மானம் கெட்ட பெண்களே!
உடைத்துச் சொல்கிறோம் உறைத்தால் திருந்திக் கொள்ளுங்கள், இல்லையோ சீரழிந்து போவீர்கள்.
பருவம் வந்தால்
சிலதை கேட்கும்போது, பார்க்கும்போது உணர்ச்சிகள் வரத்தான் செய்யும்.
திருமணம் வரை அதனை அடக்கிக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை விட்டு விட்டு நான் வளர்கிறேன்,
என் அங்கங்கள் அழகாகிக் கொண்டு வருகிறது என்பதற்காக,
பருவம் அடைந்த சூட்டோடு சூடாக ஆண்களை (மாப்பிள்ளை) தேடி சீரழிந்து போகாதீர்கள்.
படு ஆபசமாக கதைக்கும் போதும்,
அதை அப்படி காட்டு, இதை இப்படி காட்டு ப்லீஸ் என்று அவன் கெஞ்சும் போதும்
"ச்சீ வெட்கமாக இரிகிறது"
என்று போலியாக எவனோ ஒருவனுடன் தொலைபேசியில் சினுங்கும் ஒவ்வொரு பெண்ணும் மானம் கெட்டவர்கள் தான்.
அந்த அளவு ஆபாசம் மிக்க சூடான
மெசெஞ், கோல் என்று ஒருவனுடன் கதைக்கும் அளவிற்கு உம்மை அனுமதிப்பீர்கள் என்றால்,
நீங்கள் தான்
உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆட்டக்காரிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
வெட்கம் என்ற வார்த்தை ஒரு பெண்ணின் கேடயம், அது அவள் #திருமணம்_முடித்த கணவனிடம் (செல் போன் கணவன் அல்ல) மட்டுமே போலியான கொஞ்சலாக வர வேண்டும்.
"செல்லம், டார்லிங்" என்று இரவு பகலாக உம்மை கொஞ்சும் ஒருத்தன், உமக்குப் பின்னால் வைத்திருக்கும் கேவலமான பெயர் தான்,
(சொல்லக் கூடாது என்றாலும் சொல்கிறோம்,)
"அவள் ஒரு #அரிப்பு_பிடிச்ச #%&₹@, சாமன் " மச்சான்
என்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
"நான் அப்பிடி இல்ல, எல்லாரயும் போல என்னையும் அந்த லிஸ்ட்ல போட்டுடாய் தானே" என்று சில ஆண் சிங்கங்கள் ரோஷம் எடுத்து கோபித்துக் கொண்டு செல்வார்கள்,
என ஒப்பாரி வைத்துக் கொண்டு சோக ஸ்டெடஸ்களை போட்டு ஆயிரம் மெசேஜ், கோல் என நீங்கள் அழைய,
அவரும் பட செண்டிமெண்ட், சோக பாட்டு, ஸ்டெடஸ் என்று போட்டி உம்மை அழ வைத்துக் கொண்டிருப்பான்.
காரணம்
எங்கோ, எப்படியோ உமக்கு செட் (Set) ஆன அவனுக்கு,
இப்படிப்பட்ட நேரத்தில் கூட
#சாமனை எப்படி மடக்கி மீண்டும் காலடியில் நாய் போல படுக்க வைப்பது என்பது நன்றாக தெரியும்.
பேசி பேசியே உமது ஆடைகளை கழட்ட வைத்து
போட்டோ,வீடியோ என்று #நிர்வாணமாக காட்ட வைக்குக் அளவு உம்மை பதம் பார்த்த அவனுக்கு,
உம்மிடம் ரோஷத்தை, கோபத்தை போலியாக காட்டி உம்மை அடிமையாக்கி அதனை சமரசம் செய்து கொள்வதற்கு கூலியாக,
இன்னும் கொஞ்சம் ஆபசமாக உம்மை காட்ட வைத்து அவனது இச்சையை தீர்த்துக் கொள்வது எப்படி என்பதும் நன்றாக தெரியும்.
அவன் ஆசை தீர கிடைக்க வேண்டியது கிடைத்த பின்
மீண்டும் உம்மை Darling என கொஞ்சுவார்கள்.
பொய் என்றால் செல் போன் காதலிகளிடம் கேட்டுப் பாருங்கள் சிலர் சொல்வார்கள், பலர் சொல்ல முடியாமல் விழுங்கிக் கொள்வார்கள்.
அந்த அளவு அவர் ரோஷம் உள்ள ஆண் என்றால் அவன் உம்மை திருமணம் முடித்த பின் தான் பார்த்து ரசித்து, அனுபவிக்க வேண்டுமே அல்லாமல்
#விபச்சாரியிடம் செல்வதை போல் இப்படி திருட்டுத்தனமாக அல்ல என்பதை மறக்க வேண்டாம்.
கணவன் மனைவி அல்லாமல்
எவனோ ஒருவனின் காம இச்சையை தீர்த்துக் கொள்ள, போன் செக்ஸ் (Phone Sex) செய்ய நீங்கள் என்ன விபச்சாரியா?
ஒவ்வொரு தடவை அவனுடன் ஆபசமாக கதைக்கும் போதும், அந்த புகைப்படம், வீடியோ என அனுப்பும் போதும்,
அதனை இன்னும் எத்தனை பேர் பார்த்து ரசித்து தனி இன்பம் கண்டு தன் இச்சையை தீர்த்துக் கொள்கிறான் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்.
...........
அன்று மாலை
ஒரு தேவைக்காக அவளது பெரியம்மாவின் மகன் நிப்ராஸ் ஹஸ்னாவின் வீட்டிற்கு வந்திருந்தான்.
அப்போது
குளியலறையில் (Bathroom) இருந்து வந்த ஹஸ்னா டவனுக்கு (Towel) இடையில், மறைத்து எடுத்துச் செல்லும் Phone ஐ கண்டு விட்டான்.
அவனின் தலையில் எதோ பொறிதட்ட உடனடியாக
"ஹஸ்னா Phone எப்ப வாங்கினீங்க, என்ன போன்" என்று கேட்க, தடுமாற்றத்தை காட்டிக் கொள்ளாது,
"ஓ நாணா கிட்டத்துல தான் வாங்கினேன், Online ல படிக்க"
"மாஸ்ட்டர் கிட்ட ஒரு டவுட் கேட்டிருந்தன். ஆன்ஸர் சொல்ல எந்த நேரம் வேணும்டாலும் கோல் வரும்"
"அது தான் Phone அயும் எடுத்துக் கொண்டு அவசரமாக குளிக்க போனன்"
எந்த சந்தேகமும் வராமல் அவளைப் போலவே அழகாக ஒப்புவித்தாள்
"ஓ மகன் எந்த நேரமும் க்லாஸ் நடக்குற, இப்ப உலகமே மாறி....." செடிபிகேட் அ அவளது உம்மாவும் கொடுத்தாள்.
"அஹ் அது நல்லம் எங்க Phone அ பாப்போமே " என அவளுக்கு அருகில் சென்றவனிடம்,
" இல்ல... கூட்டளிகள் ட போட்டோஸ் இருக்கு" என
அங்கிருந்து நழுவப் பார்த்தவளின் கதையை காதில் போடாமல் Phone ஐ கையில் எடுத்துக் கொண்டான்.
"நீங்க பாருங்க நான் டவல காய போட்டுட்டு வாரென்"
என்று முன் பக்கம் சென்றவள் Wifi இனை Off செய்வதை நிப்ராஸ் இன் கண்கள் அவதானிக்காமல் இல்லை.
மறுபடியும் அங்கு வந்தவளிடம்
"Phone அ அன்லாக் செய்ங்களே என்றதும் "
"சொன்னேனே நானா கூட்டாளிகள்ட ஷோல் இல்லாத போட்டோ எல்லாம் இருக்.."
அவள் முடிக்க முன்,
"போனை திறங்க" என்றதும்
" உம்மா சொல்லுங்களே" என்று தன் தாயின் பக்கம் திரும்ப,
"அவ எதோ சொல்ல வாய் திறக்கும் போதே
" வாய மூடிட்டு போன் அ தொரடீ" என்று உறத்த குறலில் அவன் கத்த, அவள் அறைக்குள் ஓடி விட்டாள்.
அவள் பின்னாலே சென்று எவ்வளவு கேட்டும் அவள் திறந்தபாடில்லை.
"இரி வாரேன் " என ஹாலுக்கு சென்று Wifi யை On செய்த சில நொடிகளில்,
"Hi darling engadi 💋 💋 "
என்ற ஒரு மெசேஜ் ப்ரீவீவ் இனைக் கண்டவன்,
அவள் கண்ணத்தில் இரண்டை போட்டு அதனை அன் லாக் செய்தான்.
.........
ஒன்றை புரிந்து கொள்வோம்!
என்ன தான் டிஜிட்டல் புரட்சி என்று பீத்திக் கொண்டாலும்,
வகுப்பறையில், தெளிவாக முறையாக
கற்பிக்கும் திறன் இருக்கும் ஒரு ஆசிரியரைப் போல் எவராலும் கற்பிக்க முடியாது.
அதிலும் குறிப்பாக
மேலைத்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று இங்கும் அனைத்தையும் செய்ய முனைவது,
நாம் தண்ணீர் பாவிப்பதற்கு பதில் டிசு பாவிப்பதை போன்ற செயலாகும். (புரிதல்)
அங்கிருக்கும் கல்வி திட்டத்திற்கும் எமது திட்டத்திற்கும், பரீட்சைகளுக்கும் இடையில், தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் பாரிய வித்தியாசம் உள்ளது, என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக
வேறு வழியே இல்லை என்ற ஒரு நிலை வரும்போது,
அந்த அந்த பாடசாலையில் கற்பிக்குக்கும் ஆசிரியர்களால்,
அவர்கள் நினைத்த நேரத்திற்கு, நினைத்தபடி இவ்வாறான வகுப்புகளை நடத்தாமல்,
பாடசாலையில் கற்பிக்கும் அதே நேரத்தில், அதே நேர சூசியை பின் பற்றும் முறையான ஒரு திட்டத்துடன் (Work From Home)
அந்த பாடங்களுக்கான கற்பித்தலானது WhatsApp Or ஏனைய செயலிகள் மூலம் நடத்த ஏற்பாடுகள் நடத்தப்படுமாயின்,
பிள்ளைகள் தொலைபேசியிலோ, இதற இலத்திரனியல் கருவியிலோ இருக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோரால் ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும்,
படிப்பை போல் பிள்ளையின் ஒழுக்கம், கற்பு, மானம், வாழ்க்கை அனைத்தும் முக்கியம் அல்லவா இந்த முறை பரீட்சை தவறினால் இன்னும் ஒரு தடவை முயற்சிக்கலாம், வாழ்க்கை அப்படி அல்லவே!
அந்த வகுப்பிற்கான ஆசிரியர்களே இந்த பாடங்களை நடத்தும்போது, தத்தமது மாணவர்களின் நிலையை அவர்கள் அறிந்து வைத்து இருப்பார்கள்.
அதற்கு ஏற்றவாறு அவர்கள் பாடம் நடத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒவ்வொரு மாணவர்களையும் தம்மால் முடிந்தவரை கவனித்து கரைசேர்க்க #போராடுவார்கள்.
இதில் எதோ ஒரு வித நியாயமும்,
தவிர்க்க முடியாத கால சேவையும், அதற்கான பலனை முழுமையாக இல்லா விட்டாலும் முடிந்தளவேனும் பெற்றுக்கொள்ள முடியுமாகும்.
இது எல்லாவற்றையும் விட்டு விட்டு
தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பது போல்,
ஒரு மாணவனின் அடிப்படை நிலை என்ன என்பதைக் கூட அறியாத, எங்கோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு,
ஆசிரியர் தொழிலுக்கே அவப்பெயராக அங்கும் இங்கும் முளைத்திருக்கும் இந்த Onlin Teachers எனும் காலான் கூட்டங்களால்,
உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை எதோ விதத்தில் குழி தோண்டி புதைத்து விடும் சந்தர்பங்கள் மிக மிக அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
இதனை அனுபவ ரீதியாக இன்றளவில் பலர் உணர்ந்து இருப்பார்கள்.
ஆனாலும் அங்கு கிடைக்கும் ஆண் பெண் தொடர்புகள், தொலைபேசி முக நூல் தொடர்புகள்,
ஏனைய தேவையற்ற தொடர்புகள், பழக்கவழக்கங்களை மையமாக வைத்தே அதிகப்படியான கொரோனா ஆன்லைன் வகுப்புகள் பெயரளவில் தொடர்கிறது.
மாணவர்களே
இப்படியான இடங்களில் சீரழியாதீர்கள், இருக்கும் புத்தகம் நோட்ஸை வைத்து கரை சேர முயற்சி செய்யுங்கள்.
அதே போல் இப்படியான
போலி கூத்துகளை உருவாக்கி மாணவ மாணவியரின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.
அவ்வாறு விளையாடி அவர்கள் எதோ ஒரு விதத்திக் நாசமாகிட நீர் காரணமாக இருப்பின் அதற்கான கூலியை காலம் நிச்சயம் உமக்கு இம்மையிலோ மறுமையிலோ தந்தேயாகும்.
......
Unlock செய்த பின்
ஹஸ்னாவின் WhatsApp ஐ திறந்து பார்க்கும் போது,
இறுதியாக 49 நிமிட வீடியோ Call ஒன்று
"#மை_மாஸ்ட்டர்" என்ற இலக்கத்திற்கு சென்றிருந்தது.
அது அவள் குளியலறையில் இருந்து எடுத்திருந்த வீடியோ கோல் ஆகும்.
WhatsApp Chat இல்
அவனுடையவும், இவளுடையவும் ஆபாசபடங்கள், வீடியோக்கள் மெசேஜ்கள், வொயிஸ் க்லிப்கள், நிறைந்திருந்தது.
Gallery
வயது வந்தவர்களுக்கான வீடியோகளால் நிறைந்திருந்தது.
Phone ஐ கையில் வைத்துக் கொண்டு அவள் கண்ணத்தில் பளார், பளார் என்று அரைந்தான்.
என்ன நடக்கிறது என்பதை புரியாமல் அதிர்ந்து போயிருந்த அவளின் பெற்றோரிடம்,அந்த கைப் பேசியை காட்டிய போது,
அவளது வாப்பா ஒரு மகளை எந்த கோலத்தில் பார்க்கக் கூடாதோ அந்த கோ....... அதிர்ச்சியில் அப்படியே கதிரையில் அமர,
அவளது உம்மா அவளை போட்டு துவைத்துக் கொண்டிருந்தாள். அடித்தால் மட்டும் போன மானம் திரும்பி வருமா என்ன?
நீண்ட நேரத்தின் பின் சரி நடந்தது நடந்து விட்டது
அவனை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வோம் என்று கூறிய நிப்ராஸ்,
ஹஸ்னாவை அவனுக்கு கோல் செய்து
அவர்களின் காதல் வீட்டில் சிக்கி விட்டதாகவும், அவளை கல்யாணம் செய்து கொள் என்றும் கூறும்படி சொல்ல அவளும் அதே போல் செய்தாள்.
முதலில் பொறுப்பு, தாத்தாட வாழ்க்கை என எல்லோரையும் போல் கதை விட்டான்,
இவளும் விடாமல் அழுது அழுது கெஞ்சியபோது அழைப்பை துண்டித்து அவளை ப்லொக் செய்து விட்டான் அவன்.
அவளது வாப்பாவின் தொலைபேசியில் அவனுக்கு அழைப்பை எடுத்து மீண்டும் கதைக்கையில்
அவன் சுய ரூபத்தை காட்ட தொடங்கினான்.
"இங்க பார்ரீ இப்பிடி போன்ல கூத்தடிக்கிரவள கல்யாணம் பன்னனும்டா நான் இப்போதைக்கு 10, 15 கல்யாணம் பண்ணி இருக்கனும்"
" ஒன்ன போல எத்துனையோ பேர்ட போட்டோ,வீடியோ எனக்கிட்ட இருக்கு. வாய மூடிட்டு அடக்கமா இருக்கல்லண்டா ஓண்ட எல்லாத்தயும் நெட்டுல லீக் பன்னிருவன் கவனம் " என மிறட்டி முடிக்க முன்,
பக்கத்தில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து குத்திக்கொள்ள போனாள் அவள், நிப்ராசும்,அவளது தாயும் போராடி அவளை பாதுகாத்துவிட்டனர்.
அதன் பின்னர் இன்னும் இரண்டு தடவை அவள் தற்கொலை செய்து கொள்ள முயன்று இப்பொழுது கவுன்ஸ்லிங் பாதுகாப்பு என,
ஒரே பிள்ளையின் உயிரை காப்பாற் போராடிக் கொண்டுள்ளனர். ஆனால் அவளின் மானத்தை .......?
எதிர்வரும் காலங்களில் அவனால் இவளுக்கு என்ன என்ன தொல்லைகள், மன உழைச்சல்கள் வர உள்ளதோ யார் கண்டான்.
இப்பொழுது அந்த Group இல்லை.
ஆனால் இன்னும் ஒரு குரூப் ஐ அவன் தொடங்கலாம், இவனிடமோ அல்லது இருக்கும் ஏனைய குரூப்களில்
எத்தனை பெண் பிள்ளைகள் எப்படி எப்படி சிக்கி உள்ளனரோ அவர்கள் தான் அறிவார்கள்.
பெண்கள் இப்படி மானம் கெட்டவர்களாக உணர்ச்சியை அடக்கத் தெரியாத வி%ம் பிடித்தவர்களாக திரியும்வரை அவர்களின் சீரழிவை எவராளும் தடுத்து நிறுத்த முடியாது.
பெற்றோருக்கு தொழில் நுட்பம் பற்றிய போதிய அறிவு இல்லை. இத்தனை காலமும் படிக்கிர வயசுல Phone தேவை இல்லை என்று எதோ ஒரு விதத்தில் பிள்ளைகளை கொஞ்சமேனும் பாதுகாத்தனர்.
ஆனால் இன்று படிப்பதற்கு
இவை கட்டாயம் தேவை என்ற ஒரு மாயை உருவாகி இருப்பதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை புரிந்து நடந்து கொள்வோம்!!
கல்வியை கற்பிக்கும்
தலை சிறந்த ஆசிரியர் ஒருவர் எந்த நேரத்திலும் தன் மாணவனை கைவிடவே மாட்டார்.
இந்த கொரோனா பாதிப்பில் அவர்களினதும் சொந்த வாழ்க்கையும் நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும். என்றாலும் தமது ஒவ்வொரு மாணவரையும் எப்படியேனும் கரைசேர்த்து விடுவார்கள் என்பதை உறுதியாக நம்புவோம்! இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later