ஆல்லஹ் விண் சிறப்பு
🌹 *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்* 🌹
1 *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*
ஆதாரம்:- நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105
2 *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*
ஆதாரம்:-அல் பகரா: வசனம்: 271
3 *கஷ்டங்கள், முஸீபத்துகள் இருந்தால் அவை நீங்கிவிடும்*
ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863
4 *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது*
ஆதாரம்:- நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962
5 *அவருக்காக ஒரு மலக்கு 'துஆ' செய்கிறார்.*
ஆதாரம்:- நூல்:புகாரி: ஹதீஸ் எண்: 1442
6 *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.*
ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664
7 *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.*
ஆதாரம்:- நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787
8 *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.*
ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 664
9. *திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.*
ஆதாரம்:-அல்பகரா: வசனம் எண்: 262
10 *ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்*
ஆதாரம்:- நூல்:புகாரி: ஹதீஸ் எண்: 660
11 *அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.*
ஆதாரம்:-நூல்: முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1016
12 *ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை*
*(இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.*
ஆதாரம்:- நூல்:புகாரி: ஹதீஸ் எண்: 1897
13 *அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.*
ஆதாரம்:- அல் ஹதீத்: வசனம் எண்: 7
14 *அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.*
அல் பகரா: வசனம் எண்: 245
15 *அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.*
ஆதாரம்:- நூல்: முஸ்லிம் : ஹதீஸ் எண்: 2959
16 *உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.*
ஆதாரம்:- நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 7576
17 *தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.*
ஆதாரம்:- அல் பகரா: வசனம் எண்: 3.
18 *அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.*
ஆதாரம்:- நூல்: முஸ்லிம்,.ஹதீஸ் எண்: 1029
*அல்லாஹ் நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக... ஆமீன்.*
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later