வியாபார யுக்தி
வியாபார யுக்தி - Marketing Strategy!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பஸ்ஸில் பழக் கூடையுடன் ஏறினார்.
'‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.
அவன்தான்யா நிசமான வியாபாரி, அவன்தான்யா நிசமான வியாபாரி,
எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.
'‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவினான்.
அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும்,
‘'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று விற்க முயன்றார்.
பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.
அடுத்து, ‘'ஆறு பழங்கள் பத்து ரூபாய்’' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
பிஸினெஸ் ரகசியம் !
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
முதியவரை அருகே அழைத்தவர், ”அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ”போய்யா… அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.
‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு விற்றால்… சட்டுன்னு வாங்க, நம்ம சனத்துக்கு மனசு வராது.
அதனால் நான், ‘ஐந்து பத்து ரூபாய்’னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு அவன் வந்து சொன்னதும்… ‘அடடே லாபமா இருக்கே’னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!” என்றார் முதியவர்.
அனுபவமும்கூட வியாபார யுக்தியை கற்றுக்கொடுக்கிறது...!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later