வாக்களிக்கும் முன் சிந்திக்கவும்.

 வெகுமானம் வாங்கி வாக்களிக்க முன் சில வரிகள்...


1. உங்களுக்கு ஏதோ ஒரு சன்மாத்தையோ, பொருளையோ, வாக்குறுதியையோ தேர்தல் காலங்களில் தந்து விட்டு வாக்கை வாங்குவோர். ஆட்சியில் அமர்ந்த பின் அவர்கள் உளதூய்மையுடன் மக்கள் சேவையாற்றுவார்கள் என்று எதைவைத்து நம்புகிறீர்கள்.


2.உங்களிடம் இருந்து ஒரு வாக்கை பெற்றுவவதற்க்கு, இவ்வளவு  செலவு செய்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்த பின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்ப்பார்களா? உங்களுக்கு சேவையாற்ற விரும்புவார்களா?


3.தேர்தல் காலங்களில் சன்மானமாக வேட்பாளர்களிடம் இருந்து பெறும் உதவிகள் நம்மை எவ்வளவு காலம் வாழ வைக்கும். 


4.ஒரு வாக்குக்காக நமக்கு 1000மோ 5000மோ லஞ்சமாக தந்து வாக்கை வாங்குகிற இவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் எவ்வளவு நம்மிடம் இருந்து சுரண்டுவார்ள், என்பதை சிந்திப்போமாக!!


5.வாக்குரிமை என்பது போராட்டங்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டபின் மக்களுக்களுக்கு கிடைத்த உரிமை . அதை அற்பமான விடயங்களுக்காக விற்க்கலாமா?


6. இவ்வாறு எதையோ தந்துட்டு நம் வாக்குரிமையை கேட்கின்ற இவர்கள். பிற்காலங்களில் நமக்கு ஏதேனும் நலவு செய்வார்கள் என்று எதை வைத்து நாம் நம்புவது.


7.இவர்கள் நமக்கு சன்மானம் தந்து வாக்கு கேட்கும் உத்தியில் இருந்தாவது தெரிய வில்லையா? ஆட்சிக்கு வந்த பின் இவர்களால் நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்பது


8. உண்மையில் இவர்கள் கடந்த காலங்களில் ஏதேனும் நலவு செய்திருந்தால், அதை மக்கள் கண்கூடாக பார்த்திருந்தால் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும் எனும் அவல நிலை இவர்களுக்கு தோன்றி இருக்குமா?


9.இப்போது நாம் இவர்களிடம் வாங்கும் காசி வரஇருக்கும் காலங்களில் நாம் இவர்களின் அடிமை என்பதற்கு இவர்கள் தரும் முற்பணம் என்பதை மனதில் நிறுத்தி இவர்கள் தரும் அனைத்து வகையான சன்மானங்களையும் புறக்கணித்தால் மாத்திரமே அரசியலை தூய்மைப் படுத்த முடியும்.


#வாருங்கள்

#எழுவோம்

#இணைவோம்

#அடைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு