மஸ்ஜிதுக்கு வர நேரம் இல்லை
ஒரு அரசர் மஸ்ஜிதை கடந்து செல்கிறார். மஸ்ஜிதில் பாங்கு சொல்லப்பட்டது;
தொழுகைக்காக யாரும் வரவில்லை என்றவுடன்....
முஅத்தினிடத்தில் மீண்டும் தொழுகைக்காக பாங்கு சொல்ல அரசர் உத்தரவிடுகிறார்.
பாங்கும் சொல்லப்பட்டது.
உடனே மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரே கூச்சல் குழப்பம் ஆகிவிட்டது.
முஅத்தினிடத்தில் "இரண்டாவது தடவை எப்படி பாங்கு சொல்லலாம்?
இது மார்க்கத்தில் அனுமதி உண்டா?" என்று கேள்வி கேட்டு சண்டையிட ஆரம்பித்து விட்டார்கள்.
தொழுகையை விட அனுமதி உண்டா, என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை; ஆனால் இரண்டாவது தடவை எப்படி பாங்கு சொல்லலாம் என்ற கேள்விதான் மிகைத்திருந்தது...
இது தான் இன்று நம் சமூக நிலைமை , பாங்கு சொன்னவுடன் தொழுகைக்கு வர நமக்கு நேரம் இல்லை.....
ஆனால் கேள்வி கேட்க, சண்டை சச்சரவு செய்ய பல மணி நேரம் இருக்கிறது.
அல்லாஹ் பாதுகாப்பானாக...!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later