காலையில் எழுந்தவுடன் முதல் வேலை.


காலையில் முதல் வேலை...!!


காலை எழுந்தவுடன் காலைக் கடன் முடித்தால் தான் நாம் நிம்மதி அடைவோம். அப்புறம் தான் நாம் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்வோம். உடலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 


மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து  மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்கு வைத்தியம் வீட்டிலேயே உள்ளது.


 பின்வரும் முயற்சிகளை செய்யலாம்.

 

வயிற்றை சுத்தம் செய்ய, சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால், வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணம் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றையும் சுத்தம் செய்யும். 


வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து, 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

 

பொதுவாகவே, அதிக மாவு சத்து, "பாக்கெட்" உணவுகளை உண்பதால் சிக்கல் ஏற்படும். நார்சத்து மிகுந்த காய்கறிகள், குறிப்பாக வாழை தண்டு, பழங்கள் போன்றவை கழிவுகள் எளிமையாக வெளியேற்றும்.

 

வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போகும்.

 

திராட்சையில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து திராட்சையை சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு