மீன் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்

உணவுகள் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நம்பமுடியாத 12 நன்மைகள் !

அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன் என்றே சொல்லலாம். அத்தகைய மீன்களில் உள்ள மருத்துவ குணங்களை பட்டியலிட்டுள்ளனர் மீன் உணவு ஆராய்சியாளர்கள். அதை இங்கே முழுமையாக பார்ப்போம்.

1.மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிசெய்கிறது.

2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது.

3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைசெய்கிறது.

4.மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

5. மீன்களில் அடங்கியுள்ள கால்சி யம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷி யம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதி கரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச் சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

7.மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட் கொள்ளும் வயோதிகர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது.

9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்க மானது எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள்போன்றவற்றைக் குறைக்கிறது.

10.மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

11. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

12. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்கு மளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கி ன்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு