கிடைக்க வேண்டியதை உமக்கு கிடைக்கும்
உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக் கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது...!
இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டுச் செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே நிகழ்சிநிரல் செய்த நேர சூசிகள்தாம்...!
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக் கொள்...!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later