பூண்டு சாப்பிட்டால் நன்மை


*இரவு படுக்கு முன் ஓரு பூண்டை வறுத்து சாப்பிட்டு விட்டு ஓரு டம்ளர் வென்னீர் குடியுங்கள்.*


அப்புறம் பாருங்க அதன் அதிசயத்தை.


கேஸ் ட்ரபிள் சரியாகிவிடும்.


*பூண்டை சுட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.*


பூண்டு நம் அனைவரின் சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்வு பொருட்களில் ஒன்றாகும்.


பூண்டு ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, அதிலுள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது.


இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.


இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சமையலில் பூண்டு விழுதை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் நீங்கள் பூண்டை வறுத்து கூட சாப்பிடலாம்.


அது மட்டுமின்றி பச்சை பூண்டினுடைய ஊட்டச்சத்தை விட வறுத்ததில் நிறைய நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் அதிகம்.


எனவே உங்கள் உணவுப்பட்டியலில் வறுத்த பூண்டை சேர்த்து கொள்ளுங்கள்.


அந்தவகையில் தற்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.


செய்முறை


பூண்டு தலையின் வெளிப்புற தோலை மட்டும் உரித்து எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதன் பூண்டு பற்களை தனித் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.


எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் பூண்டு பற்களை சேர்க்கவும்.

பிறகு அதன் மேல் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் சிறிது உப்பை தூவி, அது பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும்.


நன்மைகள் என்ன ?


பூண்டை வறுத்தெடுப்பது ஆரோக்கியமான குடலை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பொதுவான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. மேலும் பூண்டு நச்சுகளை வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு