சிந்திக்கும் மனிதனுக்கு ஓரு தெளிவுண்டு
சிந்திக்கும் மனிதனுக்கு
இதில் ஒரு தெளிவு உண்டு.
ஜெர்மன் நாடு இரண்டாக பிளவுபட்டு இருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்கு மேற்காக பெரிய மதில் சுவர் கட்டி எழுப்பி பிரித்து இருந்தார்கள்.
மனதில் உள்ள குரோத வெறி காரணமாக ஒரு நாள் கிழக்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதிலை தாண்டி மேற்கு பெர்லின் பக்கமாக வீசி சென்றார்கள்.
இதை அறிந்த மேற்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிலுக்கு இதே தவறை செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டி வகைகள், பால் பொருட்கள் மளிகை சாமான்கள் என உணவு பொருட்களை கொண்டுபோய் மதில் தாண்டி கிழக்கு பெர்லின் பக்கமாக அழகாக அடுக்கி வைத்து வந்தார்கள்.
அதேநேரம், அந்தப் பொருட்களின் மேலே இவ்வாறு எழுதி வைத்திருந்தார்கள். "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கின்றதோ அதைத்தான் கொடுப்பார்கள்" ( Each Gives What He Has ) என்று. இந்த செயலும் இந்த வசனமும் பகைவனை கூட பாசத்தால் இழுக்கும் செயல் அல்லவா!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later