மீனவர் வாழ்க்கை
*மீனவர் வாழ்வியல்..*
மீனவ கிராமங்கள் பெரும்பாலும் உள்நாட்டு மக்களிடம் இருந்து தனித்த வாழ்வியலை கொண்டவை. அவர்களின் தொன்மைக்கு சான்றாக சங்க இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
பரதவர்கள், மீன் வேட்டுவர் என்பன போன்ற பெயர்களால் இவர்கள் அறியப்பட்டனர். சொத்து விவகாரங்களில் அவர்கள் பழங்கால முறையை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
அனைவருக்கும் வாழ்வாதாரமாக இருப்பது கடலில் கிடைக்கும் மீன்கள் தான். நிலம் என்பது அவர்களுக்கு வசிப்பதற்கு மட்டுமே பயன்படுவது. ஊர் கோவிலின் பெயரில் தான் அவர்களது கிராம நிலங்கள் அனைவருக்கும் பொதுவாக எழுதப்பட்டிருக்கும். ஊர் தலைவர்கள் தான் அவர்களுக்குள் வரும் சச்சரவுகளைத் தீர்த்து வந்தனர்.
இந்த கடலினை அவர்கள் பொதுவாக கருதுவதை போல உள்நாட்டில் இருக்கும் கிராமங்கள் விளைநிலங்களை அனைவருக்கும் பொதுவாக கருதி விவசாயம் செய்து உற்பத்தியாகும் தானியங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டால் ஏழ்மை என்பது இல்லாமல் போகலாம். ஒரு தொழில் பிரிவினரிடமிருந்து இருந்து மற்றொரு பிரிவினர் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் ஏராளம் உள்ளன!!
பெரும்பாலும் இவர்களின் குடும்பங்களில் பெண்கள் தான் குடும்ப நிர்வாக தலைமையை ஏற்று நடத்துகின்றனர்.
சங்குகளை நடுப்பகுதியில் அறுத்து அவற்றை வளையல்களாக மாற்றுவதில் அவர்கள் ஈடுபட்டனர்.
சங்க காலம் தொட்டு நம் மக்களிடம் இந்த சங்கு வளையல்களை தாலியாக அணிந்து வரும் பழக்கம் இருந்து வருகிறது. இன்றும்கூட இந்த பழக்கம் சில சமுதாயங்களில் நடைமுறையில் உள்ளது.
மன்னர்கள் கடல் வாணிபம் செய்ததில் பரதவர்களின் பங்கு மிக முக்கியமானது. கடலில் வீசும்காற்றில் பல வகைகளை அவர்கள் கண்டு வைத்திருந்தனர். வாடைக்காற்று, சூறைக்காற்று, தென்றல், கொண்டல் போன்ற பெயர்கள் காற்றின் வகைகளை குறிக்கும்.
நெய்தல் நிலத்தை வாழ்விடமாகக் கொண்ட மீனவர்கள் கடல் பரப்பில் கடல் நீரோட்டத்தை கொண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்கள். தமிழ் பேரரசுகள் கடல் கடந்த வணிகம் செய்ததில் இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later