காய்கரி விலை உயர்வு

#காய்கறிவிலை_ஏறிவிட்டதென_பொங்குபவர்களுக்கான_பதிவு...!!!

தக்காளி விலை ஏறிவிட்டது, 
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது, 
பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!!

நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
 என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை #வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், #விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..

COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்???

எளியவர்களை கேள்வியால் துளைக்கும் நீங்கள் இதர கார்பொரேட் பொருட்கள் விலையேறினால் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்???

சிறு காய்கறி கடைகளில் விலையினை குறைத்து கேட்டு மல்லுகட்டும் நீங்கள், ஷாப்பிங் மால்களிலும், பெருவணிக வளாகங்களிலும் எவ்வளவு விலை கூடியிருந்தாலும், பகட்டால் நவதுவாரத்தையும் மூடுவது ஏன்???

6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..?????

விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா??? இல்லை, JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..

 விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்..
இல்லையேல்,
 #கடைசி_மரமும்_வெட்டுண்டு, #கடைசி_நதியும்_விஷமேறி., #கடைசி_மீனும்_பிடிபடும்போதுதான் 
உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று..!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு