நெல்லிக்காய் பயன்கள்
நெல்லிக்காய் பயன்கள்...
தினமும் காய்ந்த நெல்லிகாய் சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. அது மட்டும் இல்லாமல் நெல்லிகாய் மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதனை சாப்பிட மட்டும் பயன்படுத்தாமல் நம்ம காலத்து முன்னோர்கள் தலை தேயித்து குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுத்தியுள்ளனர். அதாவது நெல்லிகனியை நன்றாக இடித்து அதனை வடித்த கஞ்சியில் போட்டு தலை தேயித்து குளித்து உடல் சூட்டை குறைக்க பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு செய்வதால் உடல் வெப்ப தன்மை குறைந்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது நெல்லிகாய். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து தலைமுடியும் நன்றாக வளர்ச்சி அடைய பயன்படுகிறது. நெல்லிக்காயை ஒரு நடுதர வெப்ப நிலையில் நன்றாக உலர்த்தி காயவைத்து, தினமும் காலை வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள பல வகையான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
நெல்லிக்காய் பல அதிசய மருத்துவ குணங்களை கொண்டது நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி நம்மை இளமையா வைத்து கொள்ளும். உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு.
நெல்லிக்காயில் விட்டமின் சி வேறு எந்த வகை காய் மற்றும் பழங்களில் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் விட்டமின் சி நிறைந்துள்ளது.
கால்சியம் 50 மில்லிகிராம் நிறைந்துள்ளது.
பாஸ்பரஸ் 20 மில்லிகிராம் நிறைந்துள்ளது.
இரும்பு சத்து 1.2 மில்லிகிராம் நிறைந்துள்ளது.
ஒரு ஆப்பிள் பழத்தை விட ஒரு நெல்லிக்காயில் விட்டமின்கள் மற்றும் கனிமங்களும் அதிகளவு நிறைந்துள்ளது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை:
கற்பினி பெண்கள் இதை தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
விரைவில் செரிமானம் அடைய தினமும் சாப்பிடுமுன் நெல்லிக்காய் ஒரு துண்டு மென்று அந்த சாறை விழுங்கினால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுப்படலாம்.
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை மென்று (amla benefits in tamil) அந்த சாறை முழுங்கினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
நெல்லிகாயில் (amla benefits in tamil) அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. அதனால் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு முறைக்கு மூன்று முறை உலர்ந்த நெல்லிகாயை மென்று அந்த சாறை மட்டும் விழுங்கினால் போதும், நெல்லிகாயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது.
நெல்லிகாயில் உள்ள விட்டமின் சி நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை எதிர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது.
https://world.blogspot.com
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later