சபடத்துடன் வாழு
நான் எனது வாழ்நாளில் என்றுமே புகைப்பிடிப்பதில்லை என்ற சபதத்துடன் வாழ்ந்து வருகின்றேன் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இளைஞர்களே நீங்களும் இத்தகைய சபதத்துடன் வாழவேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்து இன்றுடன் அதனைக் கைவிடுவீர்கள் என்றால் கூட என்னென்ன மாற்றங்கள் உங்களில் உணர்வீர்கள் என்று பார்ப்போமா?
புகைத்தலைக் கைவிட்டு ....
20 நிமிடங்களில் : உங்கள் இரத்த அழுத்தமானது வழமைக்கு திரும்பும்
8 மணித்தியாலங்களில் : உடல் இரத்தோட்டத்தில் காணப்படும் காபன் மொனோக்சைட்டின் ( toxic gas ) அளவு அரைவாசியாக குறைந்து ஒட்சிசனின் அலவு வழமைக்கு திரும்பும் .
48 மணித்தியாலத்தில் : இதயநோய்க்கான வாய்ப்பு குறைவடைவதோடு , எல்லா நிக்கொட்டின் ( nicotine ) , அகன்று உங்கள் நாக்கில் சுவை , மூக்கில் மனம் உணரத்தொடங்குவீர்கள்
72 மணித்தியாலத்தில் : உங்கள் சுவாசக்குழாய் தெளிவடைந்து உங்களது ( energy level ) சக்தி அதிகரிக்கும் .
2 கிழமைகளில் : உங்களது இரத்தோட்டம் அதிகரித்து அடுத்து 10 கிழமைகளுக்குள் துரிதமாக முன்னேற்றமடையும் .
3-9 : மாதங்களில் : இருமல் , மூச்சுவிடும் பிரச்சினை சீராகி சுவாசப்பபையானது 10 % முன்னேறம் கண்டடையும் .
1 வருடத்தில் : இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அரைவாசியாக குறைவடையும் .
5 வருடங்களில் : பாரிசவாதத்துக்கான சாத்தியம் புகைக்காத ஒருவருடைய ( non - smoker ) நிலைக்கு மாற்றமடையும் .
10 வருடங்களில் : சுவாச புற்றுநோய்க்கான சாத்தியம் அற்று ( non - smoker ) புகைக்காத ஒருவர் சுவாசிப்பதை போன்ற நிலையை ஏற்படுத்தும் .
15 வருடங்களில் : இதய நோய்வரும் வாய்ப்பு புகைக்காத ஒருவருடைய ( non - smoker ) நிலையை ஒத்ததாக்கும் .
இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் புகை எம் உடலுக்குப் பகை. எனவே இன்றோடு கைவிடுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளவாவது செய்யுங்கள்.
https://masoodworld.blogspot.com
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later