இடுகைகள்

உண்மையான பரிசு _காத்துருக பழகு

*உண்மையான பரிசு!* ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள். “அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை...  நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா. ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்... அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.  அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள்.  பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள். பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு ந...

உண்மையான சம்பவம் நெஞ்சை உலுக்கும் கதை

உண்மை சம்பவம்? தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்... நேன்று மாலை, குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன். அவர் 80 ரூபாய் என்றார், பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம், அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு... அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா, 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன், அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்குறீங்க என்றார் . நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 குடுங்க என்றார் . அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்..  அது மனதை என்னவோ செய்ய....  ஏன் அய்யா என்னாச்சு, ஏன் அழறீங்கன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல சார் என்றார் , நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் . என் பெயர் ஆதம் (77), என் மனைவியின் பெயர் கதீஜா (73 ) எங்களுக்கு 6 குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பம்.. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை ...

KFC motivational stories

Once, there was an older man, who was broke, living in a tiny house and owned a beat up car. He was living off of $99 social security checks. At 65 years of age, he decide things had to change. So he thought about what he had to offer. His friends raved about his chicken recipe. He decided that this was his best shot at making a change. He left Kentucky and traveled to different states to try to sell his recipe. He told restaurant owners that he had a mouthwatering chicken recipe. He offered the recipe to them for free, just asking for a small percentage on the items sold. Sounds like a good deal, right? Unfortunately, not to most of the restaurants. He heard NO over 1000 times. Even after all of those rejections, he didn’t give up. He believed his chicken recipe was something special. He got rejected 1009 times before he heard his first yes. With that one success Colonel Hartland Sanders changed the way Americans eat chicken. Kentucky Fried Chicken, popularly known as KFC, was born. R...

பிரறின் வாழ்தையால் பயப்பட வேண்டாம்

அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும்*👇🏻👇🏻 ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.  அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.  சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.  இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !* *அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*  நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.  ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.  எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.  குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அத...

நகை கடை உண்மை சம்பவம்

அதிர்ச்சியளிக்கும்  வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்! நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”. 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.70000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “12000/=” தண்டம் அழ வேண்டும். ஏறக் குறைய 16 சதவ...

பெண் புத்தி பின் புத்தி

பெண் புத்தி பின் புத்தி என்ர இதானா☹️ ஆணும் பெண்ணும் சமம் அல்ல... பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!) மொழி; பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS); ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண...

சிகரெட் உடல் நலத்திற்கு கேடு

சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். ஆர்வத்துடன் கடமையாற்றுங்கள். இருந்தாலும் பிராத்தனை செய்ய சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். மனம் அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனைக் கொடுத்தே தீரும். அதற்க்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும். தன்னம்பிக்கை மனதில் இருந்தால் உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வர துவங்கும்.

Corona vs Blood group O

O க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு  கொரோனா வராது / மிக அரிதாக வரும் என்று ஒரு அமெரிக்க ஆய்வு முடிவைக் கொண்டு பல செய்திகள் நம்மிடையே வலம் வருகின்றன  அது குறித்த எனது குறு விளக்கம் நேற்று நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியானது  இங்கு நம் சொந்தங்களுக்கும் அது குறித்த எனது விளக்கம் பின்வருமாறு  அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை  வைத்து செய்யப்பட்ட மீளாய்வில் அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்தி தான்  "O" ரத்த வகையினருக்கு  மற்ற வகையினரை விடவும் 9-18% கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர்  அவர்களும் கூட O ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை  காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் "ஓ" வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது.  மேலும் அந்த ஆய்வின் முடிவில் AB ரத்த க்ரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்  என்றும் கூறப்படுகிறது  இந்த வகை ஆய்வுகளை...

அன்பு ,சொந்தம், குடும்பம்

🙏🏿💐 அன்பு சொந்தங்களே குடும்பத்தின் வேராக இருக்கும் தாங்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் , தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் . நமது பாரம்பரிய முறைகளை பின்பற்றி , நல்ல சிந்தனையுடன் , நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தாலே எதையும் வெல்லலாம். அப்படித்தான் நமது தமிழ் பண்பாடு , பாரம்பரியம் ,,ஆன்மீகம் எல்லாமே அமைந்துள்ளது . ஒரு மண்டலம் விரதம் இருந்து நெருப்பின் மேல் பூ இறங்குதல் ,கையில் தீச்சட்டி தூக்குதல் , நாக்கில் அலகு குத்திக் கொள்ளுதல்,  தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுதல் என்று பலவாறாக நமது முன்னோர்கள் நமது உடலிலுள்ள செல்கள் எப்படி எந்த ஒரு வலியையும், நோயையும் எதிர்க்கும் சக்தியைப் பெற வேண்டும் என ஆன்மீகம் என்ற பெயரில் நமக்கும்,  மற்றும் விரதம் என்ற பழக்கத்தையுமே உருவாக்கி பசியைத் தாங்கிக் கொள்ளுதல் போன்ற எந்த சூழலையும் சமாளிக்கும் திறமையையும் நமக்கு உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால் நமக்குள்ளேயே தானாக வளர்ந்திருக்கும் தன்னம்பிக்கை என்னும் அந்த வழக்கமே நம்மை நிச்சயம் காப்பாற்றும்💐💐💐 எதையும் தாங்கி வென்றிடுவோம் வாழ்த்துக்கள் வணக்க...

இன்றைய ஆன்லைன் கிளாஸ்

#மை_மாஸ்ட்டர்  முழுமையாக வாசிக்கவும்!!!! //பேசி பேசியே உமது ஆடைகளை கழட்ட வைத்து போட்டோ,வீடியோ என்று #நிர்வாணமாக காட்ட..// Online Class என்று அழையும் பெண்பிள்ளைகளுக்கான மிக நீளமான ஆக்கம்!  (சீரழிவதற்கு நேரத்தை ஒதுக்குவதை போல் சீர் பட நேரத்தை ஒதுக்க முடியாது அல்லவா அதனால் எப்படியும்  இதனை வாசிக்க நேரம் இருக்காது 😀) இதன் சாரம்சத்தை பொறுப்புள்ளவர்கள் தயவு செய்து Phone பற்றிய அறிவு இல்லாத, பிள்ளைகளை மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பெற்றோருக்கும் சொல்லிடுங்கள். #ஆன்லைன்_பொம்புல_கள்ளன் ஒரு பருவ வயதுப் பெண்ணின் எதை பார்க்கக் கூடாதோ அதை பார்த்துவிட்டோமோ என்ற கவலை, என் மகள் இப்படி கேடு கெட்டுப் போய் விட்டாளே என்ற அதிர்ச்சியில் கதிரையில் உடைந்து போய் அமர்ந்திருந்தார் அவர். "யே டி இப்பிடி வெக்கம் கெட்டு போய் இரிக்கிராய் #வேச" (இந்த ஆக்கத்தில் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளது) ஒரு தாயின் வாயால் எந்த வார்த்தை வரக்கூடாதோ அந்த வார்த்தையால் சத்தம் வராமல் ஏசியபடி அவள் கன்னத்திலும், கண்ட இடத்திலும் அடித்துக் கொண்டிருந்தாள் அவளின் தாய். விழும் அடிகளை எல்லாம் அழுது அழுது வாங்க...

மீனவர் வாழ்க்கை

*மீனவர் வாழ்வியல்..* மீனவ கிராமங்கள் பெரும்பாலும் உள்நாட்டு மக்களிடம் இருந்து தனித்த வாழ்வியலை கொண்டவை. அவர்களின்  தொன்மைக்கு சான்றாக சங்க இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. பரதவர்கள், மீன் வேட்டுவர் என்பன போன்ற பெயர்களால் இவர்கள் அறியப்பட்டனர். சொத்து விவகாரங்களில் அவர்கள் பழங்கால முறையை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். அனைவருக்கும் வாழ்வாதாரமாக இருப்பது கடலில் கிடைக்கும் மீன்கள் தான். நிலம் என்பது அவர்களுக்கு வசிப்பதற்கு மட்டுமே பயன்படுவது. ஊர் கோவிலின் பெயரில் தான் அவர்களது கிராம நிலங்கள் அனைவருக்கும் பொதுவாக எழுதப்பட்டிருக்கும். ஊர் தலைவர்கள் தான் அவர்களுக்குள் வரும் சச்சரவுகளைத் தீர்த்து வந்தனர். இந்த கடலினை அவர்கள் பொதுவாக கருதுவதை போல உள்நாட்டில் இருக்கும் கிராமங்கள் விளைநிலங்களை அனைவருக்கும் பொதுவாக கருதி விவசாயம் செய்து உற்பத்தியாகும் தானியங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டால் ஏழ்மை என்பது இல்லாமல் போகலாம். ஒரு தொழில் பிரிவினரிடமிருந்து இருந்து மற்றொரு பிரிவினர் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் ஏராளம் உள்ளன!!  பெரும்பாலும் இவர்களின் குடும்பங்களில் பெண்கள் தான் குட...

காய்கரி விலை உயர்வு

#காய்கறிவிலை_ஏறிவிட்டதென_பொங்குபவர்களுக்கான_பதிவு...!!! தக்காளி விலை ஏறிவிட்டது,  வெங்காயம் விலை ஏறிவிட்டது, பருப்பு விலை ஏறிவிட்டது,  பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!! நான் தெரியாமல் கேட்கிறேன்!! என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் , என் மகனை டாக்டர் ஆக்குவேன் , என் மகனை கலெக்டர் ஆக்குவேன் , என் மகனை வக்கீல் ஆக்குவேன்  என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை #வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், #விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை.. COLGATE விலை ஏறலாம், HAMAM SOAP விலை ஏறலாம், PEPSI விலை ஏறலாம், CINEMA TICKET விலை ஏறலாம், KFC CHICKEN விலை ஏறலாம், THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம், GOLD விலை ஏறலாம், DIAMOND விலை ஏறலாம், எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்??? எளியவர்களை கேள்வியால் துளைக்கும் நீங்கள் இதர கார்பொரேட் பொருட்கள் விலையேறினால் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்??? சிறு காய்கறி கடைகளில் விலையினை குறைத்து கேட்டு மல்லுகட்டும் நீங்கள், ஷாப்பிங் மால்களிலும், பெருவணிக வளாகங்களிலும் எவ்வளவு விலை கூடியிருந்தாலும், பகட்டால் நவதுவாரத்தையும் மூட...

படிக்காத மனிதர்களின் வழ்க்கை

படித்து பட்டம் பெற்றவர்களைவிட படிக்காதவர்களிடமிருந்தே நான் அதிகமான அனுபவங்களை பெற்றுக் கொண்டேன் #அதுவே என்னை வேறு திசைக்கு நகர்த்தி சென்றது  #அதுவே எனது மன வலிமையை பலப்படுத்தியது  #அதுவே என்னை போராட வைத்தது  #அதுவே என்னை தோல்வியிலிருந்து மீள செய்தது  #அதுவே வேதனைகளின் போதும் சோதனைகளின் போதும் பக்குவமாக என்னை பக்குவப்படுத்தியது அதுவே என் மனதை ஏழ்மையில் பக்கம் திரும்ப செய்தது படிக்காத மனிதர்களின் அனுபவம் மகத்தானது அதனை அரவணைத்துக் கொள்ளுங்கள்

இறைவன் மோப்பம்

*இறைவனின் கோபம்..!* ××××××××××××××× புழுவின் கோபம் திமிர்தலோடு சரி... பறவையின் கோபம் கீறுதலோடு சரி... மிருகத்தின் கோபம் முட்டுதலோடு சரி... மனிதனின் கோபம் அன்றோடு சரி.... இறைவனின் கோபம் என்று முடியுமோ..? இறைவா....! உன் கோபத்தின் உச்சம்- கோயிலை மூடினாய்... மசூதியை மூடினாய்.. ஆலயத்தை மூடினாய்... வீடுகளை மூடினாய்.... உலகையே மூடினாய்...! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்.... ஊதியத்தை நிறுத்தினாய்... பழகுதலை நிறுத்தினாய்... ஒருவரை ஒருவர்- பார்த்தலையும் நிறுத்தினாய்.. மொத்தத்தில்- இயக்கத்தையே நிறுத்தினாய்...! இறைவனே...! தவறுதான்...! ஆணவம் அடைந்தோம்.. கர்வத்தில் மிதந்தோம்... உண்மையை மறந்தோம்... நன்மையை மறந்தோம்.... பொதுநலம் மறந்தோம்.... சுயநலம் மிகுந்தோம்... தவறுதான்...! இறைவா....! புனிதம் துறந்தோம்... மனிதம் மறந்தோம்... ஊரை மறந்தோம்.. உறவை மறந்தோம்... பெற்றோரையே- மதிக்க மறந்தோம்.. இறைவா உன்னையே- துதிக்க மறந்தோம்...! தவறுதான்.... தவறேதான்...! கூட்டுக்குள் முடங்கிய புழுவினைப் போலே வீட்டுக்குள் முடங்கினோம்.. கண்ணுக்குத் தெரியா இறைவனே...! உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே.... மண்ணுக்குள் எங்களைப்  புத...

Know our bodies

நம் உடலைப் பற்றி அறிவோம்... பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம...

Teachers - love you All

ஒரு சிறிய கதை...படித்ததில் மனதை கவர்ந்தது: ★★★★★★★★★★★★★★★ ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை  காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. . அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. . அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. . தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். . ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.  ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு  சிறப்புத்தன்மையும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! . அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். . அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. . ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், "முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு...

நெல்லிக்காய் பயன்கள்

நெல்லிக்காய் பயன்கள்... தினமும் காய்ந்த நெல்லிகாய் சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. அது மட்டும் இல்லாமல் நெல்லிகாய் மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதனை சாப்பிட மட்டும் பயன்படுத்தாமல் நம்ம காலத்து முன்னோர்கள் தலை தேயித்து குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுத்தியுள்ளனர். அதாவது நெல்லிகனியை நன்றாக இடித்து அதனை வடித்த கஞ்சியில் போட்டு தலை தேயித்து குளித்து உடல் சூட்டை குறைக்க பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு செய்வதால் உடல் வெப்ப தன்மை குறைந்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது நெல்லிகாய். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து தலைமுடியும் நன்றாக வளர்ச்சி அடைய பயன்படுகிறது. நெல்லிக்காயை ஒரு நடுதர வெப்ப நிலையில் நன்றாக உலர்த்தி காயவைத்து, தினமும் காலை வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள பல வகையான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: நெல்லிக்காய் பல அதிசய மருத்துவ குணங்களை கொண்டது நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி நம்மை இளமையா வைத்து கொள்ளும். உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உடல் செல்கள் நன்கு செயல்...

சபடத்துடன் வாழு

நான் எனது வாழ்நாளில் என்றுமே புகைப்பிடிப்பதில்லை என்ற சபதத்துடன் வாழ்ந்து வருகின்றேன் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இளைஞர்களே நீங்களும் இத்தகைய சபதத்துடன் வாழவேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்து இன்றுடன் அதனைக் கைவிடுவீர்கள் என்றால் கூட என்னென்ன மாற்றங்கள் உங்களில் உணர்வீர்கள் என்று பார்ப்போமா? புகைத்தலைக் கைவிட்டு .... 20 நிமிடங்களில் : உங்கள் இரத்த அழுத்தமானது வழமைக்கு திரும்பும்  8 மணித்தியாலங்களில் : உடல் இரத்தோட்டத்தில் காணப்படும் காபன் மொனோக்சைட்டின் ( toxic gas ) அளவு அரைவாசியாக குறைந்து ஒட்சிசனின் அலவு வழமைக்கு திரும்பும் .  48 மணித்தியாலத்தில் : இதயநோய்க்கான வாய்ப்பு குறைவடைவதோடு , எல்லா நிக்கொட்டின் ( nicotine ) , அகன்று உங்கள் நாக்கில் சுவை , மூக்கில் மனம் உணரத்தொடங்குவீர்கள் 72 மணித்தியாலத்தில் : உங்கள் சுவாசக்குழாய் தெளிவடைந்து உங்களது ( energy level ) சக்தி அதிகரிக்கும் .   2 கிழமைகளில் : உங்களது இரத்தோட்டம் அதிகரித்து அடுத்து 10 கிழமைகளுக்குள் துரிதமாக முன்னேற்றமடையும் .  3-9 : மாதங்களில் : இருமல் , மூச்சுவிடும் பிரச்ச...

சிந்தனை கதை _ மன்னிப்பு கேள்

படம்
🌏🚒 *சிந்தனை கதை....* *எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?* ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்!! நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா? அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன? ஞானி சிரித்தார்!! முதல் ஆளிடம், ”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா, ”என்றார். இரண்டாமவனிடம், நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான. இப்போது ஞானி சொன்னார், ”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.  இரண்டாமவன் தயக்கத்துடன், இவ்வளவு ...